உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?.. இன்னும் நான்கே நாள்தான் டைம் இருக்கு.. உடனே இத பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 10, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக செல்போனின் எப்போதும் அப்டேட் ஆக இருந்தால்தான் ஆதார் கார்டில் எந்த ஒரு அப்டேட்டையும் நம்மால் செய்ய முடியும்.

இப்படியான நிலையில் ஆதார் கார்டில் முகவரி, எழுத்துப் பிழை மற்றும் செல்போன் நம்பர் உள்ளிட்டவற்றை மீண்டும் சேர்க்க UIDAI அறிவுறுத்தியுள்ளது. வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை இந்த சேவைகளை இலவசமாக பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 14ஆம் தேதி உடன் இலவசமாக தகவல்களை சேர்க்கும் வசதி நிறைவடைய உள்ளது. அதனால் இதுவரை இந்த சேவையை பயன்படுத்தாதவர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.