கரூர் நடந்த TVK பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் ஹோட்டலில் வைத்து விஜய் நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விஜய் கூட்டத்திற்கு சென்ற மனைவி ஹேமலதா, மகள்கள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோரை இழந்த கரூர் தான்தோன்றிமலை சிவ சக்தி நகரை சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவர் கூறியதாவது, நடிகர் விஜய் என்னை சந்தித்தபோது உங்களை கரூரிரில் சந்தித்திருக்க வேண்டும்.
ஆனால் போலீஸ் பாதுகாப்பு, அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்துக்கு உங்களை வரவழைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பேசும்பொழுது அவர் பல தடவை கண்ணீர் சிந்தினார். பலமுறை சாரி சொன்னார். கல்வி, வேலை வாய்ப்பு உள்ளதாக சொன்னார். குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார் என்று கூறியுள்ளார். ஆனந்த ஜோதியின் தாய் கிருஷ்ணவேணி கூறுகையில், “விஜய் தனி அறையில் இருந்தார். என் கையை பிடித்துக்கொண்டு விஜய் அழுதார்; பின், என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும், விஜய் மீது எங்களுக்கு வருத்தம் இல்லை” என்றுள்ளார்.
