தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசி வருகிறார்.
அதில் தமிழகத்தில் அனைத்து தலைவர்களுக்கும் Standard Operating Procedure என்ற SOP வழங்கப்படுகிறது. ஆனால், தனக்கு Stalin sir Operating Procedure ஆக உள்ளது என்று விஜய் தெரிவித்துள்ளார். மக்களைச் சந்திக்கவே அரசு அனுமதி மறுப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், தன்னை நேசித்த தமிழக மக்களுக்காக நீதி கேட்டே அரசியலுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். மக்களிடம் நீதி கேட்காமல் யாரிடம் சென்று நீதி கேட்பது என்றும் தெரிவித்துள்ளார்.
