தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக அரசின் ஊழல்களைக் கடுமையாகச் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் ஊழல் மற்றும் நகராட்சித் துறையில் 1,020 கோடி ரூபாய் ஊழல் என அமலாக்கத் துறை வெளிக்கொண்டு வரும் திமுக அரசின் முறைகேடுகள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த இந்த ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற தேர்தலில் திமுக அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து, அந்த வெற்றியைக் கொண்டாட மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். ஊழல் புகார்களால் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்” எனத் தனது பாணியிலேயே அரசியல் களம் சூடுபிடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
