ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், அவங்க (திமுக) ‘என் கேரக்டரையே இன்னும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க’ன்னு சொல்றாங்க. இதே வார்த்தையை நான் சொன்னா ‘சினிமா டயலாக்’னு கிண்டல் பண்றாங்க. ஆனா, அவங்க சொன்னா மட்டும் அது ‘சிலப்பதிகாரத்துல’ இருந்து எடுத்த உயர்ந்த தத்துவமாம்! நான் சொன்னா மட்டும் சினிமா வசனமா?
நான் எப்படிப் பேசுனா உங்களுக்கு என்ன சார்? என் பேச்சை விடுங்க, என்கிட்ட இருக்குற விஷயத்தைப் பாருங்க. ஒவ்வொரு மாவட்டத்துலயும் இருக்கிற அடித்தட்டு மக்களோட பிரச்சனையைப் பத்தித் தானே நான் பேசுறேன்? அதுதானே சார் உண்மையான அரசியல்? என் வார்த்தைகளைத் தாண்டி, நான் முன்வைக்கிற மக்கள் பிரச்சனைகளுக்கு உங்ககிட்ட பதில் இருக்கான்னு பாருங்க என்று பேசியுள்ளார்.
