முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் த.வெ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் விரைவில் கட்சியில் இணைவார்கள் என்று ஈரோட்டில் பேசிய விஜய் குறிப்பிட்டுள்ளார். கே.ஏ. செங்கோட்டையன் போன்ற 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர்கள் த.வெ.க-விற்கு வருவது கட்சிக்கு ஒரு “பெரிய பலம்.
செங்கோட்டையனைத் தொடர்ந்து, தற்போதைய திராவிடக் கட்சிகளின் தலைமையின் மீது அதிருப்தியில் உள்ள மேலும் பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் த.வெ.க-வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
