“சொன்னீங்களே செஞ்சீங்களா?”… பணத்த காட்டி கிட்னியை எடுக்கும் கொடுமை… விஜய் சரமாரி கேள்வி…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு அவருக்கு திருச்சியில் பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தொண்டர்களின் கூட்ட நெரிசலில் சிக்கியதால் அவருடைய பிரச்சார வாகனம் மெல்ல மெல்ல நகர்த்து தற்போது தான் மரக்கடை வீதியை வந்தடைந்துள்ளது.

அங்கு தனது பிரச்சாரத்தை விஜய் தொடங்கியுள்ளார். தொண்டர்களின் கூச்சலுக்கு நடுவே பேசி வரும் விஜய், திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றிய உள்ளதா என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். சொன்னிங்களே செய்தீர்களா? மக்கள் நல பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா, பணத்தைக் காட்டி கிட்னியை எடுக்கும் கொடுமை நடந்துள்ளது என விமர்சித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜய் பேசியது சரியாக கேட்கவில்லை என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.