நொடிக்கு நொடி பரபரப்பு..! விஜய் – காங்., கூட்டணி..? அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின்  பக்கம் சாயக்கூடும் என்ற விவாதங்கள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் ஒருவேளை விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்தால், மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடனான கூட்டணியைத் தொடர்வார் என்று ஒரு நாளிதழ் செய்தியை மேற்கோள்காட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழக காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகளையும் கொள்கை முடிவுகளையும் விமர்சித்துள்ள அண்ணாமலை, இன்றைய சூழலில் அக்கட்சியின் மாநிலத் தலைமையின் கருத்தும், அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தும் வெவ்வேறாக இருப்பதாகவும் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் இத்தகைய குழப்பமான சூழல் மற்றும் கூட்டணி குறித்த மாறுபட்ட கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.