திடீர் திருப்பம்…. விஜய் கூட்டணிக்கு வந்தால்… டிடிவி தினகரன் தடாலடி…!

By Nanthini on ஐப்பசி 11, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் விஜய்க்கு ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மறுபக்கம் தமிழக அரசியல் கணக்குகளையும் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியின் சதியும் காவல்துறையின் அலட்சியமும் காரணம் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியும், விஜய் தாமதமாக வந்ததே சம்பவத்திற்கு காரணம் என்று திமுக அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக நிற்கும் நிலையில் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மத்தியில் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. கரூர் விவகாரத்தில் விஜய் மீது விமர்சனம் வைப்பதை முற்றிலுமாக தவிர்த்து உள்ள இபிஎஸ் திமுக அரசின் அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்று அழுத்தமாக கூறி வருகிறார்.

   

அதே சமயம் விஜய் பக்கம் பாஜகவும் நெருங்குகிறது. தங்களுக்கு ஆதரவாக நின்ற அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதற்கு அச்சாரம் போடும் விதமாக விஜயுடன் கூட்டணி என்பதை ஈபிஎஸ் சமீபத்தில் மறைமுகமாக பேசி இருந்தார். இருந்தாலும் இதில் விஜயின் முடிவு என்ன என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

   

இந்நிலையில் விஜய் கூட்டணிக்கு வந்தால் பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி கழற்றி விடுவார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி விஜயுடன் கூட்டணி வைப்பாரா என தெரியாது. எடப்பாடியை முதலமைச்சராக வா விஜய் கட்சி தொடங்கியுள்ளார்? விஜய் கூட்டணிக்கு வந்தால் பாஜகவை எடப்பாடி கழற்றி விடுவார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.