இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது பொதுவகையான மோசடி ஒன்று நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சைபர் மோசரியாளர்கள் டிராய் அதிகாரிகள் போல நடித்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறி மக்களை பயமுறுத்துகின்றனர். செல்போன் எண்ணை முடக்குவதாகவும் அல்லது கைது செய்யப் போவதாகவும் மிரட்டி பணம் பறிக்க முயல்கின்றனர். 9 நம்பரை அழுத்தினால் அதிகாரிகள் போல ஏமாற்றும் மோசாரியாளர்கள் பணம் கேட்டு மிரட்டுவார்கள். இதுபோன்ற அழைப்புகளை நிராகரித்து மோசடியில் இருந்து தப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
