தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். சமீபத்தில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதனை சட்டரீதியாக கையாண்டு வரும் விஜய் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் சேலத்தில் தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் விஜய் தொடங்க உள்ளார்.
அதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பரப்புரை நடத்துவதற்கு காவல்துறை தரப்பிலிருந்து கூட்டம் நடக்கும் இடம், எவ்வளவு மக்கள் வருவார்கள், தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் இடத்தின் பரப்பளவு உள்ளிட்ட விவரங்கள் காவல்துறையினர் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர்.
