புதுச்சேரியில் நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த ஒருவர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, சிவகங்கையைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவரின் தனிப் பாதுகாவலர் எனக் கூறப்படும் நபர், துப்பாக்கியுடன் வந்தபோது காவல்துறையினரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.
விஜய் இன்னும் சற்று நேரத்தில் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
