பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னங்களைப் பொருத்தி, பட்டன்களின் செயல்பாடுகளைச் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்தொகுதியில் மொத்தம் 47 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், இதற்காகப் பயன்படுத்தப்படும் முதல் வாக்குப்பதிவு இயந்திரத்தின் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் விஜய்.
அதே இயந்திரத்தில் முதலிடத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரும், இரண்டாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழனும், பத்தாவது இடத்தில் பாமக வேட்பாளர் திலகபாமாவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், இந்த வரிசைப் பட்டியல் குறித்த தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
