என்னக் கத எழுதுறீங்க?.. இந்தாங்க ‘சிவகாசி’ CD- கௌதம் மேனனை நோகடித்த விஜய்யின் செயல்!

By vinoth on கார்த்திகை 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

   

அதே போல அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திய திரைப்படம் என்றால் அது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி திரைப்படம்தான். அந்த படம்தான் முதல் முதலில் விஜய் நடித்ததில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் விஜய்யின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று இன்று இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.

   

#image_title

 

இடையில் விஜய், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்காக விஜய்யை சந்தித்துக் கதை சொன்னார் கௌதம் மேனன். அவர் சொன்ன கதை முழுக்க முழுக்க ஆங்கில வசனங்களோடு ஹாலிவுட் படம் போல இருந்ததாம்.

இதைக் கேட்ட விஜய் “கதையில் கமர்சியல் தன்மையை ஏற்றுங்க. இந்தாங்க சிவகாசி படத்தோட CD. இதை மாதிரி கமர்ஷியலா கதைப் பண்ணிட்டு வாங்க” என்றாராம். அதைப் பார்த்து கடுப்பான கௌதம் மேனன் ஒரு நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார்.