தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். நான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் விஜய் ஆண்டனி என்று தான் சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாக ஒரு சில நல்ல திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்து பேராதரவை பெற்றார் விஜய் ஆண்டனி.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் ஆண்டனி இயக்கி – நடித்து வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம், பிரமாண்ட வெற்றிபெற்றது. இந்நிலையில், சமீபத்தில் நடந்தான் யாராலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக மாறியது அவரின் 16 வயது மகள், மீராவின் மரணம். விஜய் ஆண்டனி மகள் மீராவின் மரணம் கோலிவுட் திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.
பல பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் விஜய் ஆண்டனி மகள் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதிலிருந்து விஜய் ஆண்டனி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீண்டு வரவேண்டும் என்று பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் விஜய் ஆண்டனிக்கு கைகொடுத்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த வீடியோ மூலமாக பார்க்கலாம்..