கொக்கைன் போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்ற காவலில் புழல் சிறையில் படைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு வரை ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடிகர் ஸ்ரீகாந்தின் சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா முதல் குறுக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காலியான கொக்கைன் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்தியின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டதின் அவருடைய கைரேகை ஒத்துப்போனது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீ காந்த் கைது குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு பல நாட்களாக உள்ளதுஇன்று நேற்று அல்ல பல நாட்களாக உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை” என்று கூறியுள்ளார்.
