தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் பல திறமைகளை கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் விஜய் ஆண்டனி. இவர் மனதில் பட்டதை எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அவருடைய பேச்சுக்கள் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இருக்கும். அவருடைய பேச்சை உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கும். நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என கலக்கிக் கொண்டிருக்கிறார். கதாநாயகனாக சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு சில வருடங்களாக இசையமைப்பதை விட்டுவிட்டு நடிகராக மாறிவிட்டார். தற்போது மீண்டும் இசையமைக்கப் போவதாக கூறி வருகின்றார்.

தற்போது விஜய் ஆண்டனி மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், நான் முதல்முறையாக ஒரு கோடி சம்பளம் வாங்கியது நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்திற்கு தான். அதற்கு முன்பு இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை. ஆனால் விஜய் படத்திற்கு முன்பே நான் முடிவு செய்து விட்டேன். இனி நாம் அதிகமான சம்பளம் வாங்க வேண்டும் என்று அதுபோல எனக்கு வேலாயுதம் படத்தில் ஒரு கோடி சம்பளம் கிடைத்தது.
நான் மியூசிக் டைரக்டராக வாங்கிய முதல் அதிகமான சம்பளம் அதுதான். அதன்பிறகு வேட்டைக்காரன், வெடி, உத்தமபுத்திரன் போன்ற படங்கள் பண்ணும் போது நான் இண்டஸ்ட்ரியிலிருந்து வெளியே வந்து விட்டேன். பிறகு இரண்டு வருடம் கழித்து நடிக்கப் போகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டேன். அந்த நேரத்தில் எல்லா படமும் ஹிட் ஆனது. கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல் தான் நான் நடிக்க வந்து விட்டேன் என்று விஜய் ஆண்டனி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
