தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தனது குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு மீரா வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா கடந்த ஒரு வருடமாக மனஅழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மன அழுத்தம் காரணமாக அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் மீரா.

இதில் Love You All, miss You All எனவும் குறிப்பிட்டு இருந்தார். நேற்று காலை மீராவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. நுங்கப்பாக்கத்தில் உள்ள சர்ச்சியில் வைத்து இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டதை அடுத்து மீராவின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

மகளின் உடலை நல்லடக்கம் செய்யும்போது மீடியாக்கள் அதை படம்பிடிக்க வேண்டாம் என விஜய் ஆண்டனி முடிவெடுத்ததால், கல்லறை தோட்டத்திற்குள் மீடியாக்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து மகளின் உடலை கண்ணீருடன் நல்லடக்கம் செய்தார் விஜய் ஆண்டனி. அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
