பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 12-ஆம் வகுப்பு படிக்கும் மீரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன மன அழுத்தத்தில் இருந்தார் என அனைவரும் சோகத்தில் உள்ளனர். மீராவின் உடலுக்கு திரை பிரபலங்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் மீரா பற்றி கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா தம்பதியினரை எனக்கு நன்றாக தெரியும். ஆரம்பத்தில் சன் டிவியில் தொகுப்பாளராக வேலை பார்த்த பாத்திமாவும் விஜய் ஆண்டனியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீரா, லாரா என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர் விஜய் ஆண்டனி கிறிஸ்டின் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி தான் பெயர் வைப்பார்கள்.

ஆனால் மகளுக்கு ஏன் மீரா என பெயர் வைத்தார் என தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாக மீரா மன உளைச்சலில் இருந்ததால் வீட்டிற்கு அருகில் இருக்கும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கான மாத்திரை அவரது ரூமில் இருந்துள்ளது. இரவு 1 மணிக்கு மாத்திரை போட்டுவிட்டு தண்ணீர் குடித்த பிறகு மீரா தூங்க சென்றுள்ளார். தற்கொலை எண்ணம் என்பது 2 அல்லது 3 நிமிடங்களில் வந்து போகும் விஷயம். அதனை கடந்து சென்று விட்டால் அதன் பிறகு வெற்றி தான்.

மீராவால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்யும் அளவுக்கு இந்த வயதில் மீராவுக்கு என்ன மன அழுத்தம் என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம். சமீபத்தில் தான் மிகப்பெரிய விபத்தில் இருந்து விஜய் ஆண்டனி மீண்டு வந்தார். அவரது மகளின் இழப்பு விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்துள்ளது. விஜய் ஆண்டனியின் தந்தை ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளும் இப்படி தற்கொலை செய்ததால் ஜெனிடிக் பிரச்சினையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் பயில்வான் எழுப்பியுள்ளார்.

