தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜக இபிஎஸ் மூலமாக விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி பேச்சு நடைபெறுவதாக பரப்புரையில் இபிஎஸ் சூசகமாக கூறியது தமிழக அரசியலில் பேசு பொருளானது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துப் போட்டியிடுவது தான் கட்சித் தலைவர் விஜயின் முடிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
