தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா…? அண்ணாமலை கொடுத்த அப்டேட்..!!

By Soundarya on ஐப்பசி 9, 2025

Spread the love

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியானது.  அதாவது கடந்த அக்.6-ம் தேதி மாலை நடந்ததாக கூறப்படும் இந்த 30 நிமிட உரையாடலில், கரூர் துயரத்திற்காக விஜய்க்குஎடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்ததாகவும், இந்த சூழலில் அதிமுக உங்கள் பக்கம் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் நாமக்கல்லில் நடந்த பரப்புரையில் எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது tvk கொடி பறந்தது. இதனால் அதிமுக- தவெக கூட்டணி உறுதி என பேசப்பட்டது. ஆனால் யாருடனும் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார். இந்நிலையில் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சித்தாந்தம் வேறுவேறாக இருக்கும்போது எப்படி பயணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.