கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது. விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதையும் செலுத்தப்பட்டது. பிறகு மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பும் நடைபெற்றது. இதனையடுத்து தலைவர் விஜய் தொடங்கியது கட்சி அல்ல புரட்சியை தொடங்கினார். கோடிக்கணக்கான மக்கள் படை இவர் பக்கம் உள்ளனர். இதற்கு பெயர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது என்று பொதுச்செயலாளர் ஆனந்த் தொடக்க உரையை தொடங்கினார்.
இந்நிலையில் மாநாட்டில் உரையாற்றி வரும் விஜய், 2026 தேர்தலில் TVK வேட்பாளர் விஜய் தான். 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் போட்டி. உங்களில் ஒருவராக உங்கள் வீடுகளில் ஒருவராக இந்த விஜய் தான் போட்டி. ஒவ்வொரு வீட்டிலும் போன பிறகுதான் நாங்கள் கட்சியை ஆரம்பித்துள்ளோம். அதனால் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட போவது இந்த விஜய் தான். உங்களில் ஒருவராக என பேசியுள்ளார்.
