வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் விஜய்… கோட்டையை பிடிக்க தவெக போடும் ஸ்கெட்ச்…!!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 30 வேட்பாளர்கள் கொண்ட முழுமையான பட்டியலை வெளியிட்டு, தேர்தல் களத்தை அதிரவைத்துள்ளார். வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் என்ற முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் களம் காண்பதன் மூலம், தனது கட்சியின் அரசியல் பலத்தை நிரூபிக்க விஜய் தயாராகிவிட்டார் என்பதை இந்த முடிவு பறைசாற்றுகிறது.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், கட்சி நிர்வாகிகளுக்கு அவர் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் இந்த நேரடித் தலையீடும், தெளிவான திட்டமிடலும் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, புதுச்சேரி அரசியல் களத்தில் ஒரு புதிய போட்டியையும் உருவாக்கியுள்ளது.