Breaking: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு … தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உறுதி..!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

தமிழக முழுவதும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக, பாஜகவினரின் அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக தவெக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது.