FLASH NEWS: இந்த மாவட்டத்தில் வரும் 7-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

பொதுவாக முக்கியமான விழாக்கள், நிகழ்வுகளின் போது அந்தந்த மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. மேலும் குடமுழுக்கு விழாவை ஒட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் தமிழக போக்குவரத்துக்கழகம் சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.