விஜய் தலைமையில் மெகா கூட்டணி… டிடிவி தினகரன் சற்றுமுன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.  இதனிடையே கரூர் விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆட்சித்து வருகின்றன.

ஆனால் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் எந்த கட்சியுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்பது விரைவில் தெரியவரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், விஜய் தலைமையில் கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்பாராத கூட்டணி அமையவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். விஜய் தலைமையை ஏற்ற டிடிவி தினகரன் செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.