BREAKING: வீடு வீடாக தீபாவளி பரிசு… செந்தில் பாலாஜி அதிரடி….!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துள்ளதால் மக்களை கவரும் வகையில் தற்போது புதுப்புது அறிவிப்புகளையும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடந்த திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தனது தொகுதி மக்களை கவரும் வகையில் சிறப்பு தீபாவளி பரிசுகளை செந்தில் பாலாஜி வழங்கி வருகின்றார். இதனைத் தொடர்ந்து கரூர் தொகுதியில் உள்ள சுமார் 88,000 குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசுகளை செந்தில் பாலாஜி வழங்கி வருகிறார். தனது ஆதரவாளர்களை ஒவ்வொரு வீடாகச் சென்று பரிசுகளை வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.