வடிவேலுவுக்காக எழுதிய கதையில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிய விஜய்.. அட., இந்த படமா..!

By vinoth

Updated on:

90 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமான வடிவேலு தனது தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழி காரணமாக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இத்தனைக்கும் அவர் அறிமுகமானக் காலம் கவுண்டமணி செந்தில் கூட்டணி புகழின் உச்சத்தில் இருந்த காலம்.

இதனால் பலரும் தங்கள் படங்களில் வடிவேலு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க தொடங்கினர். அதற்கெல்லாம் மேல் ஒரு புதுமுக இயக்குனர் வடிவேலுவை கதாநாயகனாக மனதில் வைத்து ஒரு திரைக்கதையையே எழுதியுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எழில்தான்.

   

தான் உதவி இயக்குனராக இருந்தகாலத்தில் சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் படத்தைப் பார்த்த அவர் அதன் தாக்கத்தில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படக் கதையை எழுதியுள்ளார். சாப்ளின் போலவே வித்தியாசமான உடல்மொழி கொண்ட வடிவேலுவை அதில் நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார்.

கதைப்படி வடிவேலு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் நாட்டுப்புற பாடகன். அவன் சினிமாவில் பாட்டு பாட வாய்ப்பு தேடி போராடுவது போலவும், அவன் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுவது போலவும் திரைக்கதையை அமைத்துள்ளார். கதையை முடித்துவிட்டு பல தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லியுள்ளார். ஒன்றும் வேலைக்காகவில்லை.

இதையடுத்து அவரது நண்பர்கள் இந்த கதையில் சில மாற்றங்களை செய்து ஏதாவது ஒரு இளம் கதாநாயகனுக்கு ஏற்றவாறு மாற்றுமாறு கூறியூள்ளார். அதன் பின்னரே திரைக்கதையில் மாற்றங்களை செய்து விஜய்க்கு சொல்லி சம்மதம் வாங்கியுள்ளார்.

அப்படி அவர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. படத்தில் விஜய், சிம்ரன், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எஸ் ஏ ராஜ்குமார் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் எவர் கிரீன் ஹிட்டாக அமைந்தன. படம் 175 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சிலவ்ர் ஜூப்ளி படமாக அமைந்தது.