சர்ச்சையையே சந்தித்த நயன்தாராவின் கணவருக்கு நல்ல நேரம் வந்துடுச்சு… புதுபொலிவில் விக்னேஷ் சிவன்…

By admin on தை 22, 2025

Spread the love

தென்னிந்தியாவின் நட்சத்திர தம்பதியர்கள் நயன்தாரா- விக்னேஷ் சிவன். ஆரம்பம் முதலே நயன்தாரா சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். தற்போது திருமணமான பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்தே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். தனுஷுடன் அவர்களுக்கு ஏற்பட்ட காப்பிரைட் பிரச்சினைகளில் இருந்து தொடர்ந்து இவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது.

   

சினிமாவை தவிர நயன்தாரா பலவித பிசினஸ்களில் முதலீடு செய்திருக்கிறார். அதில் ஒரு நாப்கின் பிசினஸின் மீட்டிங்கில் கலந்து கொள்ளும்போது பலவித பிரச்சினைகள் இருந்ததாக இன்ஃப்ளூன்ர்கள் வீடியோ வெளியிட்டனர். இதற்கிடையில் செல்லும் இடமெல்லாம் நயன்தாராவும் விக்னேஷ்வனும் ஆட்டிட்யூட் காட்டுகிறார்கள் ஒரு பணிவு என்பது இல்லை என்று தான் பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

   

விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து LIK என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் முழு பட்ஜெட்டை வாங்கிய பிறகும் பட்ஜெட் பத்தவில்லை என்று தயாரிப்பாளரிடம் இவர் கேட்டதால் தயாரிப்பாளர்க்கும் விக்னேஷ் சிவனுக்கும் பிரச்சினை ஏற்பட்டதனால் படம் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது என்று முன்னமே செய்திகள் வெளியாகின.

 

தற்போது அந்த பிரச்சினைகளை எல்லாம் முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் LIK திரைப்படத்தையும் முடித்துவிட்டாராம். தயாரிப்பாளர்களுடன் சமாதானமாக சென்றுவிட்டாராம். இனி LIK படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் முடிந்து வருகிற மே மாதம் LIK திரைப்படம் திரையரங்குக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனால் பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது தான் விக்னேஷ் சிவனுக்கு நல்ல செய்தி கிடைத்ததால் மிகவும் பொலிவோடு இருக்கிறாராம்.