சேலைக்கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.. வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் வாணி போஜன்..

By admin on தை 22, 2025

Spread the love

வாணி போஜன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் நடிகை ஆவார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்ற நடிகர்களுள் இவரும் ஒருவர். 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ஆஹா என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா தொடரில் நடித்தார்.

   

2013 இல் இருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் தெய்வமகள் என்ற நெடுந்தொடரில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் வாணி போஜன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு என்ற ஜீ தமிழ் தொடரிலும் நடித்திருக்கிறார் வாணி போஜன். 2019 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

பின்னர் 2012 ஆம் ஆண்டு அதிகாரம் 79 திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் வாணி போஜன். பிறகு 2020 ஆம் ஆண்டு மை கடவுளே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் வாணி போஜன். அதைத்தொடர்ந்து இன்னும் ஒரு நல்லதொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் வாணி போஜன்.

 

தற்போது வாணி போஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கருப்பு சேலை கட்டி ரசிகர்களை கவரும் வகையில் அவரது புகைப்படங்கள் இருக்கிறது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.