நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் கவினும் உண்மையாக காதலிச்சோம். கொஞ்சம் செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது. மே 30 அன்று சுர்ஜித்தும், கவினும் பேசிக்கிட்டாங்க. பின்பு சுர்ஜித் அப்பாகிட்ட சொல்லிட்டான். அப்பா என்கிட்ட இதுபற்றி கேட்டபோது இல்ல அப்பான்னு சொல்லிட்டேன். ஏன்னா கவின் என்கிட்ட இன்னும் ஒரு 6 மாதத்தில் சொல்லுன்னு டைம் கேட்டிருந்தான். அதுனால அப்பாகிட்ட சொல்லல. அதற்குள் சுர்ஜித் கவினை என்னை பெண் பார்க்க வரச்சொல்லி அழைத்துள்ளான். சம்பவத்தன்று என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது.
நான் 28 ஆம் தேதி மாலையில் தான் வர சொல்லியிருந்தேன். அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கூட்டிட்டு வந்திருக்காங்க. வந்துட்டு தான் எனக்கு சொன்னாங்க. நான் அவங்க அம்மா, தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிட்டு அவங்ககிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ஆனா கவின் கிளம்பி வெளியே போயிட்டான். அவங்க அம்மா கவினுக்கு கால் பண்ணினாங்க அவன் எடுக்கல. அதனால் நான் நீங்க சாப்பிட போங்க நான் வர சொல்றேன்னு சொன்னேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. இதை தேவையில்லாம யாரும் வதந்தி கிளப்பி வேண்டாம். உங்களுக்கு தோணுறதை பேசாதீங்க. எங்க அப்பா அம்மாவுக்கு இதுபத்தி தெரியாது. அவங்களுக்கும் இந்த கொலைக்கும் சம்மந்த இல்லை. இதோட இதை விட்ருங்க விட்ருங்க அவ்ளோதான் என பேசியுள்ளார்.
எனக்கும் கவினுக்கும் நடந்தது எங்களுக்கு மட்டுமே தெரியும்,
எங்களை பற்றி இனி யாரும் தவராக பேச வேண்டாம்,
இந்த கொலைக்கும் என் தாய் தந்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
சுபாஷினி வீடியோ வெளியீடு#JusticeForKavin #JusticeForKavinkumar #Kavin #KavinCase pic.twitter.com/4ckiB9B6es
— Aadhi Shiva (@aadhi_shiva1718) July 31, 2025
