கோபிக்கு ஹார்ட் அட்டாக்கா..? இதை பண்ணுனா கண்டிப்பா வரும்… பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ..!

By Soundarya on மார்கழி 8, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியலுக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சதீஷ். இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்திற்கு ஒரு அழகான குடும்பம் இருந்தும் அதை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது போல காட்டப்படும். பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக கோபியை திட்டி தீர்த்து இருப்பார்கள். அந்த அளவிற்கு பொய், பித்தலாட்டம் என்று செய்து குடும்பத்தை ஏமாற்றும் நபராகத்தான் கோபி கதாபாத்திரம் இருக்கும்.

தன்னைத் தானே கலாய்த்து புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி. | Tamilstar

   

இப்படி ஒரு டெரரான ரோலில் நடித்து வரும் சதீஷ் நிஜ வாழ்க்கையில் அப்படியே செம ஜாலியான் டைப். இன்ஸ்டாவில் அவரை பின்தொடரும் அனைவருக்கும் அது தெரிந்திருக்கும். இன்ஸ்டாகிராமில் அவர் எப்பொழுதும் காமெடியான பல பதிவுகளை போட்டு வருவார். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோபிக்கு ஹார்ட் அட்டாக்கா? என்று நீங்க நினைக்கறீங்க. தினமும் எக்சர்சைஸ் மறக்காம செஞ்சுருவாரு. ஜிம்முக்கு போறாரு. புயல் காற்று அடிச்சாலும் சுனாமி வந்தாலும் வாக்கிங் போகிறார்.

   

Baakiyalakshmi Serial Hero Age,நான் 60ஸ் கிட்ஸ்... பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோ வயசை கேட்டு ரசிகர்கள் ஷாக்! பார்த்தா அப்படி தெரியலையே? - baakiyalakshmi serial hero gopi ...

 

ஆனால் ஏன் ஹார்ட் அட்டாக் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம். நானும் இதை யோசிச்சேன். இதை டைரக்டரிடம் கொஞ்சம் விண்ணப்பம் போட்டேன். ஆனால் கதை என் கையிலையா இருக்கிறது. நான் வெறும் ஒரு நடிகன் நடித்து சம்பாதிக்கும் அன்றாட கூத்துக்காரன். ஆனால் மக்களே நாம் எவ்வளவு எக்சர்சைஸ் செய்தாலும் ஹார்ட் அட்டாக் வராது என்பது நிச்சயமல்ல.

#image_title

வயசுக்கு ஏற்ற மாதிரி நாம் சாப்பிடுகின்ற பழக்க வழக்கங்கள், முக்கியமாக டென்ஷனாக இருந்தால் ஹார்ட் அட்டாக் வரும். கோபி மாதிரி எப்பொழுதும் இடியட் இடியட் என்று சொல்லி மற்றவர்களை பேசி டென்ஷன் ஆகி கொண்டிருக்கும் கோபிக்கு கண்டிப்பாக வரும். உடம்புக்கு எவ்வளவு எக்ஸர்சைஸ் முக்கியமோ அதேபோல மனதுக்கும் சாந்தம் அவசியம்  என்று கூறியுள்ளார்.