அரசியல் கலந்த சினிமா.. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகாசமான படங்களின் லிஸ்ட்..!

By Nanthini on மார்கழி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித் இவர் முதன்முதலில் அட்டகத்தி திரைப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். முதலில் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்த இவர் அதன் பிறகு படிப்படியாக முன்னேறி இயக்குனர் அவதாரம் எடுத்து அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

5 films produced by director Pa Ranjith | இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும்  5 படங்கள்

   

தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார். இன்று முன்னணி இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தனது 42வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவர் இயக்கிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

10 ஆண்டுகள் கடந்தும் நினைவில் நிற்கும் 'அட்டகத்தி' - ஏன் ஸ்பெஷல்? | 10  years of attakathi moive - hindutamil.in

 

அட்டகத்தி:

கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனராக அவதாரம் எடுத்த முதன்முதலாக ரஞ்சித் இயக்கிய திரைப்படம் தான் அட்டகத்தி. இந்தத் திரைப்படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இதில் இடம்பெற்ற பாடல்களும் கதையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மெட்ராஸ்- சினிமா விமர்சனம் | Madras Review - Tamil Filmibeat

மெட்ராஸ்:

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கிய திரைப்படம் தான் மெட்ராஸ். இப்படத்தில் கார்த்தி மற்றும் கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்திருந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. ஞானவேல் ராஜா தயாரித்த இடம் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கண்ணீரின் கதையைப் பேசிய 'கபாலி'! | Kabali speaks the tears of Tamils -  Tamil Oneindia

கபாலி:

2016 ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கபாலி. இப்படத்தில் ரஜினி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அவருடன் ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் ஆன இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. 165 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Rajini's Kaala Movie video display | இணையதளத்தில் திருட்டுத் தனமாக  ரஜினியின் 'காலா' பட வீடியோ காட்சி வெளியானதால் அதிர்ச்சி

காலா:

2018 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கியிருந்த திரைப்படம் தான் காலா. மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 200 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

திரை விமர்சனம் - சார்பட்டா பரம்பரை | sarpatta parambarai review -  hindutamil.in

சார்பட்டா பரம்பரை:

2021 ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து ரஞ்சித் இயக்கியிருந்த திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

எப்படி இருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது படம்? - ட்விட்டர் விமர்சனம்! –  News18 தமிழ்

நட்சத்திரம் நகர்கிறது:

2022 ஆம் ஆண்டு துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. சந்தோஷ் நாராயணன் நீ படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Ananda Vikatan - 28 August 2024 - தங்கலான் - சினிமா விமர்சனம் | Thangalaan  movie review - Vikatan

தங்கலான்:

ரஞ்சித் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அவருடன் பார்வதி மேனன் மற்றும் மாளவிகா மோகனராகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதை காலத்துடன் உருவான இந்த திரைப்படம் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 100 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.