பாத்து கண்ணு பட்டுட போகுது… திருமணத்திற்கு பிறகு தனது காதல் மனைவியுடன் முதன்முறையாக நடிகர் கவின் வெளியிட்ட வீடியோ… குவியும் லைக்ஸ்கள்…

By Begam on மாசி 15, 2024

Spread the love

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

   

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அற்புதமாக விளையாடிய இவர் மற்றொரு பக்கம் லாஸ்ட்லியாவுடன் காதல் கொண்டார்.இவர்களின் காதல் விவகாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

   

 

அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே கவின் தனது நீண்ட நாள் காதலி மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு சின்னத்திரை மற்றும் பெரிய திரையுலகினர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் கவின். இவர் காதலர் தினத்தன்று தனது மனைவியுடன் ரொமான்டிக் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ‘பாத்து கண்ணு பட்டுட போகுது’ என்று கூறி லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….