“உன்னை கல்யாணம் பண்ண விட மாட்டேன்…” மணமேடையில் இருந்த மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி….! அக்கம் பக்கத்தினருடன் சென்று ரகளை செய்த முதல் மனைவி…. வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஆசிஃப் முகமது என்ற நபருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, அவரின் முதல் மனைவியான சஹானா ஹாசன், காவல்துறையினருடன் திடீரென திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார். மணமேடையில் அமர்ந்திருந்த மணப்பெண்ணிடம் சென்று, “நான் தான் இவரின் முதல் மனைவி, எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை, இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன்” என்று கூறிப் பகிரங்கமாகக் கண்டித்தார்.

2022-ஆம் ஆண்டு முகநூல் மூலம் பழகிக் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இடையே 2024-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தன் கணவர் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்வதை அண்டை வீட்டார் மூலம் அறிந்த முதல் மனைவி, உடனடியாகக் காவல்துறையை அணுகி மணமேடைக்கே சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாப்பிள்ளையை மீட்ட காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.