ஏய் என்னடா நினைச்சுட்டு இருக்க… அரசு பேருந்தில் ஓட்டுநரை பளார் விட்ட பெண்… இணையத்தை அதிரவிடும் வைரல் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

கொண்டிருக்கிறோம் . அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்தின் டிரைவர் ஒருவருக்கும் பெண் பயணிக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கர்நாடக மாநில அரசு பேருந்தில் பயணம் செய்த போது டிரைவருடன் பெண் பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறுகின்றது.

அப்போது அங்கு இருந்த கண்டக்டர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தும் மோதல் தீவிரமாகி விடுகிறது. இந்த காட்சியை வெளியிலிருந்த ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. பேருந்தை டிரைவர் தாறுமாறாக ஓட்டியதாகவும் தேவையில்லாமல் திடீர் பிரேக் போட்டதாகவும், இதனால் சில பயணிகள் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது. இதனால்தான் சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.