இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் நடைபெறக்கூடிய பல சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதில் உயிருடன் இருக்கும் ஆக்டோபஸ் ஒன்றை நேரடியாக வாயில் வைத்து சாப்பிடும் காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாக்கிய வீடியோவில் நபர் ஒருவர் தனது கையில் ஒரு நத்தையை பிடித்துக் கொண்டு, அதனுள் திரவத்தை ஊற்றுகின்றார். அதன் தாக்கத்தில் உள்ளே இருந்த ஒரு சிறிய அக்டோபஸ் வெளியே வருகின்றது. உடனே அந்த நபர் உயிருடன் இருந்த அந்த ஆக்டோபஸை வாயில் வைத்து மென்று சாப்பிடுகின்றார்.
உயிர் காக்க துடித்த அந்த ஆக்டோபஸை எந்த ஈவு இரக்கமும் இல்லாமல் அவர் விழுங்கும் காட்சி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த நபர் தொடர்ந்து மீண்டும் அதே முறையில் மற்றொரு ஆக்டோபஸையும் எடுத்து சாப்பிட முயற்சிக்கின்றார். இந்த காட்சிகள் வெளியான பிறகு இணையத்தில் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். மனிதர்களின் உணவுப் பழக்கம் என்பது வித்தியாசமாக இருந்தாலும் உயிருள்ள உயிரினங்களை நேரடியாக சாப்பிடும் செயல்கள் சமூகத்தில் பெரும் எதிர்ப்பை உருவாக்குகின்றன.
I want him in jail before 6pm today 🤧🤧 pic.twitter.com/M5oqzqT73B
— The Instigator (@Am_Blujay) September 7, 2025
