கொஞ்சம் கூட பயமில்ல…! நைசாக தங்க நகையை அபேஸ் செய்த பெண்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2025

Spread the love

சோசியல் மீடியாவில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு பிரபல நகைக்கடையில் ஒரு ஜோடி நகையை திருடிய வீடியோ வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு பிரபலனாக கடை அமைந்துள்ளது. இங்கு நகை வாங்குவது போல வந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்க நகைகளை பார்க்க வந்ததாக கூறியுள்ளனர். அப்போது ஒரு நெக்லஸை அந்த பெண் தனது உடைக்குள் மறைத்தார்.

பின்னர் எதுவும் தெரியாதது போல அந்த நபருடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து நகைகளை சரி பார்க்கும் போது நகை திருடு போனதை அறிந்த கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நகையை திருடிய அந்த பெண்ணையும், அவருடன் வந்த நபரையும் தேடி வருகின்றனர்.