அய்யோ, இதுங்க தொல்லை தாங்க முடியலையே.. தெரு நாய்களுக்கு பயந்து வீட்டின் கூரை மீது ஏறிய மாடு… 6 மணி நேர போராட்டம்… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

இந்தியாவில் தற்போது தெருநாய் பிரச்சனை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை நிலையில் இருக்கும் தெரு நாய்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன்படி தற்போது தெலுங்கானா மாநிலம் நிரலா கிராமத்தில் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை திடீரென்று சில தெருநாய்கள் தாக்க முயற்சித்துள்ளன. இதனால் அச்சத்தில் இருந்த அந்த மாடு அருகில் இருந்த கற்களை படிக்கட்டாக பயன்படுத்தி வீட்டின் கூரையின் மீது ஏறியது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பரபரப்புடன் கூடி அச்சத்தில் இருந்தனர். வீட்டுக் கூரையின் மீது நீண்ட நேரம் நின்ற மாடு கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கிராம மக்கள் இணைந்து அந்த மாட்டை பாதுகாப்பாக கீழே இறக்கினர். இந்த சம்பவம் நேரில் கண்டவர்களை மட்டுமல்லாமல் இணையத்தில் வீடியோவை கண்டவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியாக்கியுள்ள வீடியோவில் வெள்ளை நிற மாடு ஒன்று ஓடுகளால் கட்டப்பட்ட சிறிய வீட்டின் கூரையில் அசையாமல் நின்று கொண்டிருப்பது தெரிகின்றது. உயரத்தில் சிக்கிய நிலையில் மாடு எங்கேயும் அசையாமல் திகைத்து நிற்பது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் தெரு நாய்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

போடு ரகிட ரகிட…. மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி?…. வங்கிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…. விரைவில் வெளியாகப்போகும் அந்த ‘மெகா’ அறிவிப்பு….!

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…

39 seconds ago

தமிழகம் முழுவதும் இ-சேவை & பொது சேவை மையங்களில் இனி… அரசு அதிரடி உத்தரவு…!

தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…

1 minute ago

அதிமுகவிலிருந்து விலகும் சி.வி. சண்முகம்?… EPS-க்கு ஷாக் கொடுத்த விசுவாசி…. பின்னணியில் இருக்கும் ‘ஸ்கெட்ச்’…. பதறிப்போன ரத்தத்தின் ரத்தங்கள்….!

அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…

4 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுகவோடு கைகோர்க்கும் அண்ணாமலை?… இரவோடு இரவாக கசிந்த ரகசிய தகவல்…!

அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…

6 minutes ago

திடீர் திருப்பம்.. தவெகவில் திமுக MLA?…. போட்டுடைத்த செங்கோட்டையன்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு…

8 minutes ago

செந்தில்பாலாஜி கைது… சபதம் எடுத்த CM விஜய்?… திமுக ரகுபதி வீசிய அரசியல் குண்டு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…

13 minutes ago