இந்தியாவில் தற்போது தெருநாய் பிரச்சனை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை நிலையில் இருக்கும் தெரு நாய்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன்படி தற்போது தெலுங்கானா மாநிலம் நிரலா கிராமத்தில் வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை திடீரென்று சில தெருநாய்கள் தாக்க முயற்சித்துள்ளன. இதனால் அச்சத்தில் இருந்த அந்த மாடு அருகில் இருந்த கற்களை படிக்கட்டாக பயன்படுத்தி வீட்டின் கூரையின் மீது ஏறியது.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பரபரப்புடன் கூடி அச்சத்தில் இருந்தனர். வீட்டுக் கூரையின் மீது நீண்ட நேரம் நின்ற மாடு கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கிராம மக்கள் இணைந்து அந்த மாட்டை பாதுகாப்பாக கீழே இறக்கினர். இந்த சம்பவம் நேரில் கண்டவர்களை மட்டுமல்லாமல் இணையத்தில் வீடியோவை கண்டவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியாக்கியுள்ள வீடியோவில் வெள்ளை நிற மாடு ஒன்று ஓடுகளால் கட்டப்பட்ட சிறிய வீட்டின் கூரையில் அசையாமல் நின்று கொண்டிருப்பது தெரிகின்றது. உயரத்தில் சிக்கிய நிலையில் மாடு எங்கேயும் அசையாமல் திகைத்து நிற்பது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் தெரு நாய்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
तेलंगाना के आदिलाबाद जिले के निराल गांव में एक अनोखी घटना देखने को मिली, जहां आवारा कुत्तों के झुंड से बचने के लिए एक सांड घर की छत पर चढ़ गया। अचानक हुए इस नजारे से ग्रामीण हैरान रह गए। बताया गया कि शेख गफूर नामक किसान का सांड कुत्तों के हमले से घबराकर रस्सी तोड़कर भागा और… pic.twitter.com/e6cCrhW7IA
— KHABAR FAST (@Khabarfast) September 16, 2025
