குஜராத் மாநிலம் வதோதராவில் நிகழ்ந்த ஒரு கோரமான சாலை விபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வதோதராவின் கலாலி கிராமத்தைச் சேர்ந்த ஆதித்ய குமார் என்ற அந்த இளைஞர், பிப்ரவரி 21-ம் தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தார். பானிகேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றபோது, திடீரென நிலைதடுமாறிய அவரது இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த ஒரு தனியார் பெட்ரோல் பங்கிற்குள் புகுந்தது.
மேலும் அங்கு காற்று நிரப்பும் இயந்திரத்தின் மீது பலத்த வேகத்துடன் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் வந்து ஏர் ஸ்டேஷன் மீது மோதுவதும், இளைஞர் தூக்கி வீசப்படுவதும் பதிவாகியுள்ளது.
पेट्रोल पंप पर टकराई बेकाबू बाइक
वडोदरा शहर के पानीगेट पुलिस स्टेशन इलाके में एक युवक पानीगेट पुलिस स्टेशन इलाके से गुजर रहा था. इसी दौरान अचानक बाइक की स्टीयरिंग से उसका कंट्रोल खो गया और वह पेट्रोल पंप की हवा भरने वाली मशीन से टकरा गया, जिससे युवक की मौत हो गई. पूरी घटना का… pic.twitter.com/IwJqVMA3K7
— NDTV India (@ndtvindia) February 25, 2026
“>
இந்நிலையில் அதிவேகமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பானிகேட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வதோதராவில் பட்டப்பகலில் நடந்த இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
