சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் சாலையில் டயப்பர் மட்டும் அணிந்தபடி நடந்து செல்லும் ஒரு பச்சிளங் குழந்தை, திடீரெனக் கால் தடுமாறி கீழே விழுகிறது. உடனடியாக அந்த வழியே நடந்து வந்த பெண் ஒருவர் குழந்தையைத் தூக்குகிறார். இந்தச் சம்பவம் எந்த ஊரில் நடந்தது என்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
ஆனால், இந்தச் சாதாரண வீடியோவைப் பார்த்த சிலர், “இவன் பெரிய ஆளானதும் பெரிய ஸ்கேண்டல் பண்ணுவான்” என்பது போன்ற வக்கிரமான மற்றும் மலிவான கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் நடக்கக்கூட ஒழுங்காகக் கற்றுக்கொள்ளாத ஒரு பிஞ்சுக் குழந்தையின் வீடியோவை வைத்து இப்படி மலிவான முறையில் கதைகளைப் பரப்புவது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, பிஞ்சுக் குழந்தைகளின் பிம்பத்தை இதுபோன்ற கீழ்த்தரமான கமெண்ட்கள் மூலம் இழிவுபடுத்துவது நெட்டிசன்களின் மோசமான மனநிலையைக் காட்டுகிறது எனக் நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
