உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு பின்னால் அமைந்துள்ள ஹைதராபாத் கேட் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி பயங்கர மோதலாக மாறியுள்ளது.
தங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் தப்பியோடி உணவகத்திற்குள் புகுந்த நிலையில், அவர்களைத் துரத்திச் சென்று கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. வாரணாசிப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற மோதல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த தகவலைத் தொடர்ந்து காசி மண்டல காவல்துறையினர் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
