பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

By Swetha on ஆனி 4, 2026

Spread the love

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான ‘சிலந்தி வால் கொம்பு விரியன்’ (Spider-tailed horned viper), பறவையொன்றைக் கண்ணிமைக்கும் நொடியில் கொடூரமாக வேட்டையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேற்கு ஈரானின் பாறை நிறைந்த கரடுமுரடான நிலப்பரப்புகளில் வாழும் இந்த பாம்புகள், உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் அபூர்வமான ஊர்வன இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

இந்த வைரல் காணொளியில், பாறைகளுக்கு இடையே ஒரு சிறிய சிலந்தி தரையில் ஊர்ந்து செல்வது போல் தெரிகிறது. பசியோடு இறையைத் தேடி அலையும் ஒரு பறவைக்கு, அது மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு உணவாகத் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் அது சிலந்தி அல்ல; Pseudocerastes urarachnoides என்ற அறிவியல் பெயர் கொண்ட சிலந்தி வால் கொம்பு விரியன் பாம்பின் வாலாகும். இந்த பாம்பின் வால் பகுதி பார்ப்பதற்கு அப்படியே ஒரு சிலந்தியின் தோற்றத்தையும், அதன் அசைவுகளையும் அச்சு அசலாக ஒத்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

   

https://www.instagram.com/reel/DZJGoVADLcW/?utm_source=ig_web_copy_link

   

பூச்சிகளை உண்ணும் பறவைகளை ஈர்ப்பதற்காகவே இந்தத் தனித்துவமான உடலமைப்பை இப்பாம்முகள் பெற்றுள்ளன. தங்களின் வால் பகுதியை சிலந்தி போல அசைத்து, பறவைகளை இவை ஏமாற்றுகின்றன. இரை என நம்பி வரும் பறவைகள் அந்த அசையும் வாலில் முழு கவனத்தையும் செலுத்தும்போது, பாறைகளின் நிறத்தோடு கச்சிதமாக மறைந்திருக்கும் இந்த பாம்பு, பறவை தனது எல்லைக்குள் வந்தவுடன் மின்னல் வேகத்தில் தாக்கி நொடிப்பொழுதில் இரையாக்கிக் கொள்கிறது. இந்த அரிய மற்றும் தந்திரமான வேட்டைக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.