ஐயோ… UPSC தேர்வில் உண்மையான போட்டியாளர்களே கிடையாதா?… பெண் IAS அதிகாரியின் பகீர் வீடியோ…!

By Swetha on ஆவணி 22, 2026

Spread the love

யூபிஎஸ்சி தேர்வுக்கான போட்டி உண்மையில் தேர்வர்களின் மனதில்தான் அதிகம் உள்ளதே தவிர, நிஜத்தில் அல்ல என்று 2020-ஆம் ஆண்டு தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது ரேங்க் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரி தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பேசிய அவர், லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தாலும் தீவிரமாகவும் உண்மையாகவும் படிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்றார். எனவே சுற்றியுள்ள மனிதர்களையும், முன்னணி கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களையும் பார்த்து பயப்படத் தேவையில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பின்னணியைப் பற்றிப் பேசிய அதிகாரி பரி, தாம் ஒரு சாதாரண பள்ளி மற்றும் கல்லூரியில்தான் படித்ததாகக் கூறினார். ராஜஸ்தான் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய தனது தாயாரின் மக்கள் பணியைப் பார்த்து வளர்ந்ததால், தாமும் மக்களைத் நேரடியாகச் சந்தித்து பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே ஏற்பட்டதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

   

https://www.instagram.com/reel/DcOKWizJwpg/?utm_source=ig_web_button_share_sheet

   

மேலும், யூபிஎஸ்சி தேர்வு என்பது வெறும் அறிவைச் சோதிக்கும் தேர்வு மட்டுமல்ல, அது ஒருவரின் மன வலிமையையும் தன்நம்பிக்கையையும் சோதிக்கும் களம் என்றும் அவர் வலியுறுத்தினார். சுற்றியிருக்கும் அழுத்தங்களால் கலங்காமல், தொடர்ச்சியான பயிற்சியையும் சுயநம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டால் இந்த தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று தேர்வர்களுக்கு அவர் ஊக்கமளித்துள்ளார்.