“அய்யய்யோ மாட்டிகிட்டோமே”… பள்ளி வகுப்பறையில் பையில் ஒளித்து சாப்பிட்டு டீச்சரிடம் மாட்டிக் கொண்ட சிறுவன்… க்யூட்டாக கொடுத்த ரியாக்ஷன்… மனதை கவரும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதில் சில வீடியோக்கள் நம்மை கவரும் வகையில் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்படுவதால் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு கூட்டம் உள்ளது. பொதுவாகவே எந்த இடத்தில் குழந்தைகள் இருந்தாலும் அந்த இடம் அப்படியே மகிழ்ச்சியாக மாறிவிடும். குழந்தைகள் செய்யும் சிறு சுற்றித்தனங்கள் கூட நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தான் இருக்கும். அவர்கள் செய்யும் சில செயல்கள் வெறுப்பை உண்டு பண்ணாலும் அதில் கொஞ்சம் சேட்டை நிறைந்து இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நாம் சிறுவயதில் எல்லாம் டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஒளிந்து கொண்டு தின்பண்டங்களை சாப்பிட்டு இருப்போம். அப்படிதான் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சிறுவன் ஒருவன் பள்ளியில் தனது பையில் ஏதோ ஒன்றை ஒளித்து வைத்துக் கொண்டு டீச்சருக்கு தெரியாமல் ஒளிந்து ஒளிந்து சாப்பிடுகின்றான். அந்த காட்சியை பார்ப்பதற்கே மிகவும் க்யூட் ஆக உள்ளது.ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் சாப்பிடுவதை டீச்சர் பார்த்ததால் அய்யய்யோ நாம் மாட்டிக் கொண்டோம் என்று அச்சத்தில் அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ வெளியாகி தற்போது பலருடைய மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளது.