தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சமீபத்தில் SC தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனால் தமிழகத்தில் சுமார் 1.76 லட்சம் ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியானது. ஆனால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் ஆசிரியர்கள் சற்று நிம்மதி அடைந்திருந்த நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி தரும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்கும் பணியை பள்ளி கல்வித்துறை தற்போது தொடங்கியுள்ளது. இந்த திடீர் முடிவு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
