உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு வெடி விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரில் உள்ள பஜார் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 2 ஸ்கூட்டர்கள் திடீரென வெடித்து சிதறின. சந்தை பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்ததால் அருகில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். நான்கு பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். ஒரு ஸ்கூட்டரின் உரிமையாளர் அஸ்வினி குமார் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு ஸ்கூட்டரின் உரிமையாளர் விஜேந்தர் ராஷ்தோகி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி சரியாக தெரியவில்லை. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் சட்ட விரோத பட்டாசு சேமிப்பு காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
कानपुर ब्लास्ट का सीसीटीवी फुटेज।#KanpurBlast #Kanpur #blast https://t.co/yf8EteUlHz pic.twitter.com/r1ypZZkvZw
— SANJAY TRIPATHI (@sanjayjourno) October 9, 2025
