இனி பணம் அனுப்ப முடியாது… Googlepay, Phonepe-ல் முக்கிய மாற்றம்… திடீர் அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரும்பாலும் தற்போது மக்கள் செல்போன் மூலமாகவே UPI பயன்படுத்தி பணம் அனுப்பி விடுகிறார்கள். இதற்காக google pay, போன் பே, பே டி எம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறும் பயனர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் நோக்கத்திலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை RBI வெளியிட்டுள்ளது. அதன்படி இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து வைத்திருக்கும் Joint Bank Account இல் முக்கிய மாற்றம் வந்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது google pay அல்லது ஃபோன் பே மூலமாக பணம் அனுப்ப முயன்றால் அதற்கு வங்கி கணக்கை வைத்திருக்கும் மற்றொரு நபரும் ஒப்புதல் வழங்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இனி பணம் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.