#image_title
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த செய்தி அஜீத் மட்டும் சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த திரைப்படம் பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தான் இதற்கு விடிவு காலம் பிறந்து இருக்கின்றது. பிரச்சனைக்கு மேல் பிரச்சினையில் சிக்கிய விடாமுயற்சிக்கு தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தீபாவளி அன்று இப்படத்தை ரிலீஸ் செய்யப்படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது சூர்யாவின் கங்குவா திரைப்படம் தீபாவளி அன்று தான் வெளியாக இருக்கின்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் கங்குவார். இந்த திரைப்படம் 3d அனிமேஷனில் உருவாகி கிட்டத்தட்ட பத்து மொழிகளுக்கு மேல் வெளியாக உள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே இந்த திரைப்படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.
இந்த படத்துடன் தற்போது விடாமுயற்சி திரைப்படம் மோத போகின்றது. இதற்கு முன்பு அஜித் மற்றும் சூர்யாவின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதி இருக்கின்றது. அப்படி மோதியதில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கின்றது. 2001 ஆம் ஆண்டு விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஸ் படத்துடன் அஜித்தின் தீனா திரைப்படம் மோதியது.
அதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்துடன் அஜித் நடிப்பின் வெளியான ஆஞ்சநேயா திரைப்படமும் வெளியானது. இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுபடியும் இருவரும் மோதிக் கொள்ளும் வகையில் கங்குவா திரைப்படம் விடாமுயற்சி திரைப்படத்துடன் மோத இருக்கின்றது. இதில் எந்த திரைப்படம் ஜெயிக்கும் என்பதை பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…